புதுச்சேரி அய்யனார் கோவிலில் முதல் கால யாக பூஜை
புதுச்சேரி: உழந்தை கீரப்பாளையம் அய்யனார் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாக பூஜை நேற்று துவங்கியது. முதலியார்பேட்டை மேல் உழந்தை கீரப்பாளையத்தில், பூர்ணா– புஷ்கலா சமேத அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாளை 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று 21ம் தேதி காலை 8:00 மணிக்கு, அக்னி சங்கீரகணம், தீர்த்த சங்கீரகணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. மாலை 4:00 மணிக்கு ஆச்சார்ய வர்ணம், கும்பாலங்காரம், முதற்கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று 22ம் தேதி காலை 9:00 மணிக்கு 2ம் கால யாக பூஜையும், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 23ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 7:30மணிக்கு பூர்ணாஹூதி, 8:30 மணிக்கு கடம் புறப்பாடும், 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் ஆனந்த நடராஜருக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம், 6:00 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு திருக்கல்யாண உற்சவமும், 8:30மணிக்கு பைரவர் பூஜையும் நடக்கிறது.