உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

கந்தபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

தேனி: என்.ஆர்.டி., நகர் கணேச கந்தபெருமாள் கோயிலில் நாளை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி, காலை 9 மணிக்கு புண்ணியாஹனம், கும்ப பூஜை, நவகலச திருமஞ்சனம் நடக்கிறது. ஜூன் 24ல் காலை 9 மணிக்கு மேல் கருட வாகன புறப்பாடும், மாலை 6 மணிக்கு மேல் ஊஞ்சல் சேவையும் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !