உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கமேஸ்வரர் கோவில் கடை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

சங்கமேஸ்வரர் கோவில் கடை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் கடைகள் ஏலம், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் பிரசாத விற்பனை செய்யும் உரிமம், சமய புத்தக விற்பனை, கூடுதுறை பகுதியில் தேங்காய், பழம், பூஜை சாமன்கள் விற்பனை செய்யும் உரிமம், முடி சேகரம் செய்து கொள்ளும் உரிமம், கோட்டை விநாயகர் கோவில் முன் பக்தர்கள் உடைக்கும் சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், கோவிலுக்கு சொந்தமான, 39 தென்னை மரங்கள் மகசூல் உரிமம் போன்றவற்றுக்கான ஏலம் ஆண்டுதோறும் நடக்கும். நடப்பாண்டுக்கான ஏலம், கடந்த, 9ம் தேதி நடந்தது. யாரும் பங்கேற்காததால், ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஏலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆறு இனங்களுக்கான ஏலம் மட்டும் நடந்தது. போட்டிகள் நிறைந்த பிரசாத கடை ஏலம், கோவில் பின்னால் தேங்காய், பழம், பூஜை பொருட்கள் விற்பனை ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் வரும், 30ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. ஏல நிர்ணயத் தொகை அதிகமாக உள்ளதே, யாரும் பங்கேற்காததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல் பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் பூக்கடை நடத்துவதற்கான ஏலம் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. இதுவும் ஏல தாரர்கள் வராததால், ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !