திருமலை தரிசனம் முன்பதிவு கூடியது
ADDED :3567 days ago
ஈரோடு: திருமலை திருப்பதி சுவாமி தரிசன டிக்கெட் இனி, 90 நாட்கள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஈரோடு மாநகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஈரோடு ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் இணைந்து தரிசன டிக்கெட் வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக தரிசன டிக்கெட், தங்கும் வசதி, 60 நாட்கள் வரை முன் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் தரிசனம் டிக்கெட், ரூ.300, ரூ.50 டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் வசதி, 90 நாட்கள் வரை முன் பதிவு செய்யலாம். சேவா டிக்கெட்டுகள் எப்போதும் போல், 60 நாட்கள் வரை மட்டுமே முன் பதிவு செய்யலாம். இதை ஸ்ரீவாரி டிரஸ்ட் சேர்மன் உமாபதி தெரிவித்துள்ளார்.