நெய்க்காரப்பட்டி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்
ADDED :3491 days ago
நெய்க்காரப்பட்டி: கொண்டலாம்பட்டி அடுத்த, நெய்க்காரப்பட்டி, இளந்தோப்பு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 21ம் தேதி அதிகாலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை, புதிய சிலைகளுக்கு ஆதிவாசம், கண் திறப்பு, கோபுர கலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தது. நேற்று காலை, 9.45 மணிக்கு கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் விக்கிரகங்களுக்கு புனிதநீர் ஊற்றி, முத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.