பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் சிறப்பு தியானம்
ADDED :3504 days ago
சோழவந்தான்: சோழவந்தான் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யோகா, தியானம் நடந்தது. ஜெனகை மாரியம்மன் கோயில் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரம்மாகுமாரி அமைப்பை சேர்ந்த அமிர்தா, ‘உலக மாற்றத்திற்கான இறைஞானம்’ குறித்து பேசினார். மருது சேது வரவேற்றார். வழக்கறிஞர் முத்துமணி, கூட்டுறவு வங்கி தலைவர் ராமச்சந்திரன், பேராசிரியர் ஜெயபாலன், நிர்வாகி பொன்ராஜ் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ராஜயோக தியானம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிர்வாகி பழனியப்பன் நன்றி கூறினார்.