அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை: ரூ.90 லட்சம் வசூல்
ADDED :3503 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக செலுத்துவதற்கு கிரிவலப்பாதை மற்றும் கோவில் வளாகத்தில் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. உண்டியல் மாதந்தோறும் பவுர்ணமி முடிந்தவுடன் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா தலைமையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் காணிக்கையாக, 90 லட்சத்து 5,376 ரூபாய், தங்க நகை, 181 கிராம், வெள்ளி நகை, 684 கிராம் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.