உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாம்பரம் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தாம்பரம் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தாம்பரம்: சைவ பாடிகாட் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வெகு சிறப்பாக நடந்தது. தாம்பரம், சைவ பாடிகாட் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் காலை, 8:00 மணியளவில், வெகு விமரிசையாக நடந்தது. விடியற்காலை, 5:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியும், 6:00 மணிக்கு, நான்காம் கால வேள்வியும், 7:45 மணிக்கு, உலக நலன் வேண்டி வழிபாட்டுடன், கும்பாபிஷேகமும் நடந்தது. அதை தொடர்ந்து, மகா அபிஷேகஆராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, முனீஸ்வரனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !