தென்கரை கோட்டை மாரியம்மன் திருவிழா
ADDED :3433 days ago
அரூர்: தென்கரைகோட்டை அருகே, மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நடந்த தீ மிதி நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பூகரகம் மற்றும் அக்னிகரகத்துடன் பக்தர்கள் வந்தனர். சாமிக்கரகம் தங்களை தாண்டி சென்றால் அம்மன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கரகஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் தரையில் படுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதி நாளில் அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கப்பட்டது.