தேவபாண்டலத்தில் கும்பாபிஷேக விழா
ADDED :3433 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் குந்த வேல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தேவபாண்டலத்தில் வள்ளி தெய்வானை சமேத குந்தவேல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை கோ பூஜை, யாகபூஜைகள் நடந்தது. கலசங்கள் கோவிலை ஒருமுறை வலம் வந்த பின், கொடிமரம், வள்ளி, தெய்வானை சமேத குந்தவேல் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தேவபாண்டலம் ரவி குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இன்ஸ்பெக்டர் வினாயக மூர்த்தி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவபாண்டலம் செங்குந்தர் மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.