வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
காஞ்சிபுரம்: சேர்மன் சாம்பசிவம் தெருவில் உள்ள, வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சேர்மன் சாம்பசிவம் தெருவில் உள்ளது, வரசித்தி விநாயகர் கோவில். இக்கோவிலில், கடந்த சில மாதங்களாக, திரு ப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, திருப்பணிகள் முடிவடைந்து, இம்மாதம், 26ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதிவாசிகளால் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த, 16ம் தேதி பந்தக்கால் நடப்பட்டு, 24, 25 தேதிகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள் கோவிலில் செய்யப்பட்டன. தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. 8:30 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, 9:00 மணிக்கு, கோவிலின் கலசங்களில், புனித நீர் ஊற்றப்பட்டது. வெகு விமரிசையாக நடைபெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு, காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.