உத்திரமேரூர் கோவிலில் துரியோதனன் படுகளம்!
ADDED :3432 days ago
உத்திரமேரூர்: உத்திரமேரூர், திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூரில் உள்ள இக்கோவிலின் அக்னி வசந்த திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் தொடர்ச்சியாக தினமும், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் துாது, அபிமன்யு சண்டை, கர்ணன் மோட்சம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், மகாபாரத சொற்பொழிவும், நாடகமும் நடந்தன. விழாவின் நிறைவு நாளான நேற்று, காலை, 11:30 மணிக்கு, பதினெட்டாம் நாள் போரில் துரியோதனனை பீமன் வீழ்த்தி வெற்றி கண்ட காட்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், உத்திரமேரூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.