உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி மகாகணபதி கோவில் மகா கும்பாபிஷேகம்

பண்ருட்டி மகாகணபதி கோவில் மகா கும்பாபிஷேகம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தொட்டி காலனி  மகா கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம் சென்னை மயிலாப்பூர்  ஸ்ரீராமகிருஷ்ண  மடம் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம்  காலை 8:00 மணிக்கு விக்÷ னஸ்வர பூஜை, தேவதா வழிபாடு, அனுக்ஞை, சங்கல்பம், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால  யாகம், பூர்ணாகுதி, இரவு 10:00  மணிக்கு பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது. நேற்று காலை 8:00 மணிக்கு பள்ளியெழுச்சி,  கோபூஜை, பிரம்மச்சாரி பூஜை, பிம்மசுத்தி, பி ம்ம ரக்சாபந்தனம், நாடிசந்தானம், காலை 10:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 11:15 க்கு  மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஊராட்சி தலைவர்  ேஹமமாலினி பாபு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !