உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 11, 12ல் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் 11, 12ல் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம், ஜூலை, 11 மற்றும், 12 தேதிகளில் நடக்கிறது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் சக்ரத்தாழ்வார் நட்சத்திரத்தை முன்னிட்டு ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி சுதர்சன ஹோமம் நடக்கிறது. ஜூலை, 11ம் தேதி காலை விஷ்வக்சேன ஆராதனம், பகவத் வாசுதேவ புண்யாஹவாசனத்துடன் பூஜை துவங்குகிறது. தொடர்ந்து பல்வேறு யாக பூஜை நடக்கிறது. மறுநாள் (12ம் தேதி) சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, வேத, ஸ்தோத்ர, திவ்யப்ரபந்த சேவாகாலம் நடக்கிறது. தொடர்ந்து சக்கரத்தாழ்வார் திருமஞ்சன கலசாபிஷேகம், அலங்காரம், 11 மணிக்கு சுதர்சன சகஸ்ரநாம அர்ச்சனை, 12 மணிக்கு தீபாராதனை, சாற்றுமறை தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !