செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :3715 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பன்னிரு சைவத்திருமுறைகளில் 8ம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின் 51 பதிகங்கள், அதிலுள்ள 658 பாடல்களை செம்பொற்சோதிநாதர் கோவில் ஓதுவார்கள், காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஓதினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி திருநாவுக்கரசர் திருமடம் நாச்சியப்பன் செய்திருந்தார்.