உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் மேல்சாந்தி 16ம் தேதி தேர்வு

குருவாயூர் மேல்சாந்தி 16ம் தேதி தேர்வு

குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மேல்சாந்தி தேர்வு, நாளை மறுதினம் நடைபெறும். ஆறு மாதம் மட்டுமே உள்ள பதவிக்கு இதுவரை, 60 பேர் விண்ணப்பித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது, கோவிலின் மேல்சாந்தியாக கிரீசன் நம்பூதிரி பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த மேல்சாந்தி தேர்வு செய்யப்படவுள்ளார். இப்பதவிக்காக இதுவரை, 60 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்களில் தகுதி வாய்ந்த, 57 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் (16ம்தேதி) நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு, தந்திரி முன்னிலையில் நடைபெறும். அவர்களில் தகுதியானவர்களில் ஒருவர், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மேல்சாந்தியாக நியமிக்கப்படுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !