உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொசவபட்டி புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில் நற்கருணை திருவிழா

கொசவபட்டி புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில் நற்கருணை திருவிழா

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கொசவபட்டி புனித ஞானப்பிரகாசியர் ஆலயத்தில் திவ்ய நற்கருணை திருவிழா நடந்தது.  கடந்த ஜூன் 25 அன்று ஞனப்பிரகாசியர் திருவிழா நடந்தது. மறுநாள் திவ்ய நற்கருணை திருவிழா நடந்தது. தொடர்ந்து கொசவபட்டி வட்டாரத் தலைவர் கபிரியேல் ஆண்டனி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது.  இரவு முக்கிய வீதிகள் வழியாக மின் அலங்கார தேர்பவனி நடந்தது. பாதிரியார் ஜோசப் செல்வராஜ் தேர்பவனியை நிறைவேற்றினார். ஊர் முக்கியஸ்தர்கள், மாவட்ட குருக்கள், கன்னிமார்கள் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !