உடுமலை விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக விழா
உடுமலை :உடுமலை அருகே ஜீவா நகர் ஜோதி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டுவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில் ஜோதி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கும்பாபிேஷக மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி, காலையில் கணபதி ேஹாமமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, சிறப்பு அபிேஷகம், பூஜைகள், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை இடம்பெற்றன. பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர், குங்குமம், விபூதி, திருமஞ்சனம், தேன், எலுமிச்சை உள்பட்ட, 18 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. விழாவின் சிறப்பாக தசதரிசனம் நடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.