கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :5141 days ago
ஒட்டன்சத்திரம் : தும்மிச்சம்பட்டி புதூர் சவுடம்மன் கோயிலுக்கு சொந்தமான வெரியப்பூர் வீரதம்மன், தாத்தப்பன் மாலை கோயில் மற்றும் கருப்பணசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி, நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜைகள் நடந்தன. மாலை கிராம தெய்வ வழிபாடு, வாஸ்து சாந்தி, முதற்கால யாகபூஜை நடந்தது. கருப்பணசாமி கோயிலுக்கு புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை மூதாதையர் வழிபாடு நடந்தது. இரவு கங்கணம் கட்டுதல் மற்றும் பூக்கூடை, பழக்கூடை, மாக்கூடை அழை த்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மறுநாள் சுவாமிக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டது. தோகமலை மலைக்கோட்டை குருகுல சவுடமுத்துகவுடர் முன்னிலை வகித்தார். காமுகுல ஒக்கலிகர் (காப்பு) படவானர் குல தாயாதிகள் மற்றும் தும்மிச்சம்பட்டிபுதூர் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.