உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபநாசம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்கம்

பாபநாசம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்கம்

விக்கிரமசிங்கபுரம் : தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் பாபநாசம் உகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் அன்னதானத்தை நெல்லை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷிணி துவக்கி வைத்தார். பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் நேற்று துவங்கிய தமிழக அரசின் அன்னதான திட்டத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து மதியம் சுமார் 1.35 மணிக்கு கோயில் வளாகத்தில் நெல்லை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷணி அன்னதானத்தை துவக்கி வைத்து, கோயிலில் அன்னதான உண்டியலை திறந்து வைத்தார். கோயில் ஆய்வாளர் சுப்புலெட்சுமி, நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் ராவ், அம்பாசமுத்திரம் காசிவிஸ்வநாதர் கோயில் நிர்வாக அதிகாரி அஜித், விக்கிரமசிங்கபுரம் நகர அதிமுக செயலாளர் குமார்பாண்டியன், ஜெ., பேரவை சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் 180 பேர் கலந்து கொண்டு உணவருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !