பயமும் மறதியும் போக்க எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
ADDED :3436 days ago
சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சக்தி என்பவற்றில் ஒன்றை 108 தடவை எழுதுங்கள். நீங்கள் பெருமாள் பக்தராக இருந்தால் ஓம் நமோ நாராயணாய நமஹ, லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே ஸ்ரீராமஜெயம் என்பவற்றில் ஒன்றை இதே போல எழுதுங்கள். நீங்கள் எதை மறந்தாலும், இதை மட்டும் மறக்காமல் தினமும் எழுதி விட வேண்டும். முதலில் இது ஞாபகசக்தியை அதிகரிக்கும் பயிற்சி. அடுத்து, இந்த நாமங்கள் பயத்தை போக்க வல்லவை. பயிற்சி மறதியைப் போக்கடிக்கும். ஞாபகசக்தி பயத்தைப் போக்கடிக்கும்.