நம்புங்கள் .. நம்புங்கள்!
ADDED :3524 days ago
நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. அதன் அவசியம் பற்றி இயேசுநாதர் உதிர்க்கும் முத்தான மூன்றுபொன்மொழிகள் இதோ:
*நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து,கடலில் பெயர்ந்து விழு என்றாலும் அப்படியே நடக்கும்.
*நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும்,உறுதியும் கொண்டிருங்கள்.
*நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான். இத்தகைய இதயம் உங்களில் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வசனங்கள் உங்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைத்திருக்கும் தானே!