சிதம்பரம் நடராஜர் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :3430 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
உற்சவத்தையொட்டி இன்று (1ம் தேதி) அதிகாலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடாகி, நடராஜர் சன்னதி கொடிமரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை 9:00 மணிக்கு உற்சவ தீட்சீதர், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை, செய்து கொடி ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.