காளஹஸ்தி கோவிலில் புதிய தரிசன வரிசை அமல்!
ADDED :3430 days ago
திருப்பதி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்கு, தினமும், 70 ஆயிரம் பக்தர்கள் வரை வருகின்றனர். தரிசனத்துக்காக, பாம்பு போல் வளைந்த தரிசன வரிசையில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.இதையடுத்து, கோவில் மகாதுவாரத்திலிருந்து, புதிய தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஒரு மணி நேரத்திற்குள், தரிசனம் முடித்து வெளியேற முடியும். இந்த புதிய தரிசன முறை, நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.