ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் இன்று கொடை விழா
ஏரல் : ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது. ஏரல் ஒன்பது தெரு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சவுக்கை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நிகழ்ச்சிகள் நேற்று ஆரம்பமானது. முக்கிய விழாவான கொடை விழா இன்று நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து பால்குடம் எடுத்து நகர் வீதிவலம் வருதல், மதியம் மகாஅபிஷேகம், மஞ்சள் நீராடுதல், மதிய தீபாரதனை, 3 மணிக்கு அம்மன் கேடய சப்பரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு தாமிரபரணியிலிருந்து அம்மன் கும்பம் எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு கரகாட்டம், இரவு 10 மணிக்கு புஷ்ப அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பிரம்மசக்தி அம்மன் கோயிலிலிருந்து அம்மன் கேடய சப்பரத்தில் புறப்பட்டு பொன் சப்பரத்திற்கு வருதல், அம்மன் புறப்பாடு நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் பொன்சப்பரத்தில் எழுந்தருளி சிங்காரி மேளம், செண்டை மேளம், கரகாட்டம், வாண வேடிக்கையுடன் நகர் வீதிவலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை மற்றும் மதியம் தீபாராதனை நடக்கிறது. 15ம் தேதி இரவு 9 மணிக்கு சென்னை வாழ் சவுக்கை முத்தாரம்மன் உறவின் முறை நாடார் சங்கம் சார்பில் திரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.