சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திருஇருதய அன்னை ஆலய திருவிழா
சாத்தான்குளம் : சாத்தான்குளம் புனித மரியாயின் மாசற்ற திரு இருதய அன்னை ஆலய 150ம் ஆண்டு நிறைவுப் பெருவிழா 10 நாட்கள் நடந்தது. முதல்நாள் பங்குத்தந்தை எட்வர்ட் தலைமையில் பங்குத்தந்தை ஜோசப் சேவியர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. தினந்தோறும் மறையுரை, நற்கருணை ஆசீரும், காலையில் ஜெபமாலை திருப்பலியும் நடந்தது. 9ம் திருவிழாவன்று தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், சப்பர பவனியும் நடந்தது. 10ம் திருவிழாவன்று குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கப்பட்டது. இரவு நற்கருணை பவனி மற்றும் மறையுரையுடன் திருக்கொடி இறக்கப்பட்டது. நேற்று சமபந்தி அசனவிருந்து நடந்தது. விழாவில் பள்ளி கலையரங்கில் பள்ளி மாணவர்கள், பழைய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. சென்னை தூய நெஞ்ச இறையியல் கல்வி பேராசிரியர் அருட்தந்தை டாக்டர் ஜோசப்ரவிபாலன், ஜார்ஜ் ஆலிபன், தரிஸ்ஜோ, மெரிஸ் ஆகியோர் மறையுரை வழங்கினர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை வட்டார முதன்மைக்குரு எட்வர்ட், உதவி பங்குத்தந்தை வசந்தன், சகோ.ஸ்டார்லின் மற்றும் பங்கு பணிக்குழு அன்பியங்கள் செய்திருந்தனர்.