இரட்டைப் பிள்ளையார் வழிபாடு ஏன்?
ADDED :3433 days ago
சில திருத்தலங்களில் ஒரே சன்னிதியில் இரண்டு (இரட்டை) பிள்ளையார்கள் எழுந்தருளியிருப்பதைத் தரிசிக்கலாம். இந்த ’இரட்டைப் பிள்ளையார்’ பிரதிஷ்டைக்கு ஒரு ஐதீகம் உள்ளது. இந்த இரட்டைப் பிள்ளையாரில் ஒருவர் இடையூறு வராமல் தடுப்பார், மற்றவர் கேட்ட வரத்தை அளிப்பார். இதுவே இரட்டைப் பிள்ளையார் வழிபாட்டின் தத்துவம். ஒரே சன்னிதியில் இரட்டைப் பிள்ளையார் அருள்புரியும் திருத்தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன.