ராமேஸ்வரம் கோயிலில் புதிய கொடி மரம் ஜூலை 21ல் பிரதிஷ்டை
ADDED :3428 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.5 லட்சம் செலவில் தயாராகிவரும் புதிய கொடி மரம், ஜூலை 21ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு, பர்தவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரம் முறிந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் செலவில் புதிய கொடி மரம் அமைக்க ராம்கோ குரூப் நிர்வாகம் முன்வந்தது. அதன்படி 40 அடி நீளத்தில் தேக்கு மரம் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்மீது காப்பர் மற்றும் தங்க தகடுகள் பொருத்தி கொடிமரம் தயார் செய்வதற்கான நிர்மாண பணிகள் வேகமாக நடக்கிறது. ஜூலை 11ல் பாலாலய பூஜையும், ஜூலை 21ல் புதிய கொடிமரம் பிரதிஷ்டையும் செய்யப்பட உள்ளது, என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.