உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவில் பிரமோற்சவம்: 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

அருணாசலேஸ்வரர் கோவில் பிரமோற்சவம்: 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், ஆனி பிரமோற்சவம், வரும், 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தட்சணாயன புண்ணிய காலம் என அழைக்கப்படும், ஆனி பிரமோற்சவம் வரும், 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி. தொடர்ந்து, பத்து நாள் நடைபெற உள்ளது. வரும், 7ம் தேதி காலை, 7.53 முதல், 8.35 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தினமும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்கார, ஆராதனையும் காலை மற்றும் இரவு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதியில் வீதி உலா வந்து. பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !