நவபாஷாண சிலை ரூ.3 கோடி ஜோதிடர் உட்பட 3 பேர் கைது!
ராமநாதபுரம்: ‘நவபாஷாண முருகன் சிலையை வைத்-தி--ருந்தால் ஆயுள் நீடிக்கும்’ எனக் கூறி, மூன்று கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற ஜோதிடர் உட்பட, மூன்று பேர் சிக்கினர். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவன் ராஜ-லிங்-கம். ஜோதிட ரான இவன், கோவில் அர்ச்சகராகவும் இருந்-தான். ‘மூன்று தலைமுறைக்கு முந்தைய, நவபாஷாணத்தால் செய்-யப்-பட்ட தண்டாயுதபாணி சிலை உள்ளது. இச்சிலையை வீட்டில் வைத்தால் ஆயுள் நீடிக்கும்’ என, தகவல் பரப்-பி-, 5 கோடி ரூபாய்க்கு விற்க, பலரிடம் பேரம் பேசினான். நேற்று காலை, 10:00 மணிக்கு காரில் வந்த சிலர், ராஜலிங்கம் வீட்டிற்கு சென்றனர். மூன்று கோடி ரூபாய்க்கு பேரம் பேசி, சிலையை விற்க ராஜலிங்கம் முயன்றான். தகவலறிந்து அங்கு வந்து பதுங்கியிருந்த போலீசார், ராஜலிங்கம் உட்பட நான்கு பேரை பிடிக்க முயன்றனர். இதில், ராஜலிங்கம், ராமநாதபுரம் நகர ம.தி.மு.க., முன்னாள் செயலர் சிங்கம், 56, மண்டபம் ரமேஷ், 36, சிக்-கினர். ராமநாதபுரம் பாரதி நகர் ம.தி.மு.க., நிர்வாகி சுரேஷ் தப்பி ஓடிவிட்-டார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கூறுகை யில், ‘‘அது நவபாஷாண சிலையா, போலியா என ஆய்வில் தெரியும். இவர்களுக்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கிறோம்,’’ என்றார்.