வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்விய பிரபந்தம்
ADDED :3424 days ago
செஞ்சி: செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் பாகவதர் குழுவினர் கடந்த 2ம் தேதி துவங்கி, 9ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு நேற்று முன்தினம், சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் நடந்தது. ஆலம்பூண்டி சுதர்சனம் தலைமையில், நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரத்தை பக்தர்கள் படித்தனர். நிகழ்ச்சியை வழக்கறிஞர் ரங்கபூபதி துவக்கி வைத்தார். வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன், ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி இயக்குநர் சாந்தி பூபதி, டாக்டர் ஷர்மிளா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.