உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோம வார அமாவாசை நாக அம்மனுக்கு பூஜை!

சோம வார அமாவாசை நாக அம்மனுக்கு பூஜை!

காஞ்சிபுரம்: சோமவாரம் அமாவாசையான நேற்று, காஞ்சிபுரம் கச்ச பேஸ்வரர் கோவில் நாக அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அபிஷேகம் செய்து  வழிபட்டனர். திங்கள் கிழமை சோம வாரம் என, அழைக்கப்படுகிறது. இந்த தினம்  அமாவாசையன்று வந்ததால் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.  நாக தோஷம், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதி, நாக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, அரச மரத்தை சுற்றி வந்து  வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள அரச மரத்தடி நாக அம்மனை ஏராளமான பக்தர்கள்,  வழிபட்டு மரத்தை சுற்றி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !