நித்ய கல்யாண பெருமாள் கோவில்மகாமண்டபம் புதிதாக சீரமைப்பு
திருவிடந்தை: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், மகா மண்டபம் சீரமைக்கப்பட்டுள்ளது.வைணவ, 108 திருத்தலங்களில், மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், 62வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் மூலவர் ஆதிவராக பெருமாள், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஆகியோர், முறையே அகிலவல்லி தாயார், கோமளவல்லி தாயார் ஆகியோருடன், பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். திருமணம், மகப்பேறு உள்ளிட்ட தோஷங்களுக்கு, பரிகார தலமாக பிரசித்தி பெற்றது. இக்கோவிலை, வழிபாட்டின் அடிப்படையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை, பண்டைய பாரம்பரிய கோவில் அடிப்படையில், இந்திய தொல்லியல் துறை நிர்வகிக்கின்றன. அறநிலையத்துறை சார்பில் திருப்பணி செய்யப்பட்டு, 2006, ஜூனில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2014 இறுதியில், தொல்லியல் துறை சார்பில், ரசாயன பூச்சு மூலம் கோவில் துாய்மைப்படுத்தப்பட்டது. மேலும் சிறு சீரமைப்புகளும் மேற்கொண்டதால், அப்பணியை திருப்பணியாக கருதி, 2014 டிசம்பரில், பாலாலயம் செய்யப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, கோவில் மகாமண்டப தென்பகுதி மேல்தளத்தில், தாங்கு துாண் துண்டாகி, கீழே விழும் ஆபத்தில் இருந்தது. அதை முற்றிலும் அகற்றி, புதிய துாண் அமைக்க, தொல்லியல் துறையிடம், கோவில் நிர்வாகம் வலியுறுத்தியது. இச்சீரமைப்பிற்காக, அங்கு வழிபட்டு வந்த உற்சவர், ஆண்டாள் சன்னிதிக்கு மாற்றப்பட்டு, வழிபாடு தொடர்கிறது. தொல்லியல் துறையும், மகாமண்டப சேத துாண்களை அகற்றி, புதிதாக அமைத்துள்ளது. அதைத்தொடர்ந்து, மண்டப மேல்தள எடையை குறைக்க கருதி, 4 அடி உயரத்தை குறைத்து சீரமைக்கவும், அத்துறை முடிவெடுத்துள்ளது. இப்பணியும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், கும்பாபிஷேகம் தாமதமாகிறது. தொல்லியல் துறை பணிகள் முடிந்ததும், திருப்பணிகளை செய்து, தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து உள்ளோம். கோவில் நிர்வாகத்தினர், நித்ய கல்யாண பெருமாள் கோவில்