உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவிலில் பூஜை

செல்லாண்டியம்மன் கோவிலில் பூஜை

கிருஷ்ணராயபுரம்: மாயனூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் யூனியன், மாயனூர் அருகில் காவிரி ஆற்று பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று ஆனி அமாவாசை முன்னிட்டு செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. இதில், மாயனூர் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !