செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் விழா
ADDED :3416 days ago
காஞ்சிபுரம்: செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், திருவாதிரை விழா விமரிசையாக நடந்தது. ராமானுஜருக்கு செவிலிமேடு பகுதியில் கோவில் உள்ளது. அவர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரை அன்று அக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று காலை, 11:30 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் முடிந்து, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பெண்கள், 108 ராமானுஜர் அந்தாதி பாடினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.