காரைக்கால் பள்ளிவாசல்களில் ரம்ஜான் தொழுகை!
ADDED :3394 days ago
காரைக்கால்: காரைக்காலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின், சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஒருவரையொருவர் ஆரத் தழுவி ராம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மீராப்பள்ளி வாசல், கீதர்பள்ளிவாசல், செய்கு மொய்தீன் பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல், புளியங்கொட்டை சாலை மஸ்ஜிதே ஹூசைனி பள்ளிவாசல், மெய்தீன் பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. சேத்துார், அம்பகரத்துார், திருப்பட்டினம், நல்லம்பல், கருக்கங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.