அய்யா வைகுண்டசுவாமி கோவிலில் பால்முறை திருவிழா
ADDED :3399 days ago
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அய்யா வைகுண்டசுவாமி கோவிலில், நான்காம் ஆண்டு, பால்முறை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள், இன்று முதல் நடைபெறுகின்றன. கும்மிடிப்பூண்டி, அய்யா வைகுண்டசுவாமி கோவிலில், கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன், நான்காம் ஆண்டு பால்முறை திருவிழா துவங்கியது. அன்று முதல், வருகிற, 10ம் தேதி வரை, தினமும் மாலை, 4:30 மணிக்கு, திருஏடு வாசிப்பும், விளக்க உரையும் வழங்கப்படுகிறது.