உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த விநாயகர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்

ஆனந்த விநாயகர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்

கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம், வள்ளலார் நகரில் உள்ள ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதையெ õட்டி, நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று 8ம் தேதி காலை 7:00 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை நடக்கிறது.  இரவு 8:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து, நாளை 9ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை,  மூலமந்திர ஹோமம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு மூலவர் விநாயகர் யந்திர  ஸ்தாபனமும், இரவு 10:30 மணிக்கு அஷ்டபந்தன சமர்பணமும் நடக்கிறது. 10ம் தேதி காலை 7:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை துவ ங்குகிறது. 10:15 மணிக்கு மாக பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்தரா தானம் மற்றும் கடம் புறப்பாடாகி,  11:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம்  நடக்கிறது. பிற்பகல் 3:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர், சுவாமி பிரகார வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !