உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

வடலு?ர்: குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், வீரபத்ர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.  குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், வீரபத்ரசுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி கடந்த 8ம் தேதி காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. மாலை முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, யாத்ராதானம் முடிந்து கடம் புறப்பாடாகி காலை 9:30 மணிக்கு மூலவர் சித்திவினாயர், பரிவார தேவதைகள் கோபுரங்களில் புனித நீர் உற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !