சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சன பெரு விழா
ADDED :3579 days ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், ஆனித் திருமஞ்சன பெரு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, மாலை 6.00 மணிக்கு, பால், தேன், சந்தனம்,பன்னீர் உள்ளிட்டவற்றால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7.00 மணிக்கு சோடச தீப வழிபாடும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் புதுச்சேரி சைவ சித்தாந்த பெருமன்றத்தினர் செய்திருந்தனர்.