உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் கோவில் முடி காணிக்கை ரூ.12.45 கோடி

ஏழுமலையான் கோவில் முடி காணிக்கை ரூ.12.45 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலை யான் கோவிலுக்கு, முடி காணிக்கை மூலம், 12.45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் ரகம் வாரியாக தரம் பிரித்து, மாதந்தோறும், முதல் வியாழக்கிழமை, இணையதளம் மூலமாக ஏலம் விடுகிறது. அதன்படி, கடந்த வியாழன் அன்று, 14 ஆயிரத்து, 500 கிலோ தலைமுடி விற்பனை செய்ததன் மூலம், 12.45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது.

தினேஷ் கார்த்திக்: திருமலை ஏழுமலையானை, நேற்று காலை, இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, ரயில்வே டி.ஐ.ஜி., ஈஸ்வரராவ் ஆகியோர், தங்கள் குடும்பத்தினருடன், வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் தரிசித்தனர். தரிசனம் முடித்து திரும்பிய அவர்களுக்கு, ரங்கநாயகர் மண்டபத்தில், தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !