உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசநகரி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

அரசநகரி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடி அருகே அரசநகரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் துவங்கி நான்கு நாட்களாக நடந்தது. இதில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்த்து சாந்தி, அங்குரார்ப்பணம், அஷ்ட்டபந்தனம், கட ஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாக பூஜைகளுக்கு பின் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாரியம்மன், பரிவார தெய்வங்கள் மூலஸ்தான கோபுர கலசங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிவகுமாரசிவம், கோபிநாத்சர்மா சர்வசாதகம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சுப்பம்மாள் குருந்தலிங்கம், அறங்காவலர் கண்ணன், திருப்பணி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அரசநகரி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !