மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3387 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், கருக்காத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மாமல்லபுரம், கருக்காத்தம்மன் கோவில், பல நுாற்றாண்டுகள் பழமையானது. மைசூர் காளி, மகிஷாசூரனை மாமல்லபுரம் வரை துரத்தி வந்து, இங்குள்ள மலைக்குன்றில் வதம் செய்து, இங்கு கருக்காத்தம்மனாக கோவில் கொண்டதாக, தல வரலாறு கூறுகிறது. கிராமத்தினர் நிர்வகித்து வரும் இக்கோவிலில், 150 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிேஷகம் நடைபெற்றது; அதன் பின் நேற்று தான் நடந்துள்ளது. காலை, 10:00 மணிக்கு, சன்னிதி கள் விமானங்களில் புனித நீரூற்றி, மகாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.