கொடிமர அபிஷேகம்!
ADDED :3384 days ago
உசிலம்பட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள வெங்கடாஜலபதி கோயிலில் மூன்று படி விளக்கெண்ணெயை மூன்று படி தயிரில் கலந்து, அந்தக் கலவையை சிறிதுசிறிதாக துணியில் எடுத்து கொடி மரத்தின் மேலிருந்து அபிஷேகம் செய்துகொண்டே வருவர். அபிஷேகம் முடிந்தபின் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.