தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் ஆடித்திருவிழா கொடியேற்றம்
ADDED :3386 days ago
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடிப் பெருவிழா நேற்று துவங்கியது. கோயிலில் சிறப்பு பூஜைகளுடன், நேற்று காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் துவாஜாரோகணம் பூஜைகள் செய்து, சூரியபிரபையில் கொடியேற்றம் நடந்தது. அதற்கடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்க உள்ளது. ஜூலை 17ல் திருக்கல்யாணம், 19ல் தேரோட்டம், 21ல் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. சிறப்பு பூஜைகளை வெங்கட்ராமன், ராஜப்பா பட்டாச்சாரியார்கள் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் மகேந்திரபூபதி செய்துள்ளனர்.