உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்

சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்

சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.   பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாத முனிவர் வழிப்பட்ட சிதம்பரம் சவுந்திரநாயகி அம்மன் சமேத அனந்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி திரு மஞ்சனத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்,  தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு ேஹாமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, நடராஜ ருக்கு மகா அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சிவனடியார்கள் பன்னிரு திருமுறை பாராயணம் செய்து வழிப்பட்டனர். நடராஜர் சிற ப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !