உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மங்களநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  கடந்த 8ம் தேதி கணபதி ஹோமத்துடன்  துவங்கியது. 9ம் தேதி மாலை 4:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜை, 10ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை  5:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவு 8:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.  கும்பாபிஷேகத்தையொட்டி  நேற்று (11ம் தேதி) காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, கடம் புறப்பாடாகி, 9:45 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி  கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 1:00 மணியளவில் நடந்த தேர் திருவிழாவில்  ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !