இடைப்பாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3485 days ago
இடைப்பாடி: குரும்பப்பட்டி, கணபதி, மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இடைப்பாடி, குரும்பப்பட்டியில் உள்ள, மஹா கணபதி, மாரியம்மன் கோவில் கட்டட பணி முடிந்து, கும்பாபிஷேகத்துக்காக, கோபுரம் மீதுள்ள கலசம், அதன் மீது புனிதநீர் ஊற்ற, கல்வடங்கத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து, கடந்த, 10ம் தேதி, பக்தர்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். இந்த நிலையில், ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. காலை, 7 மணியளவில், புனித கலசங்களுக்கு ஆச்சாரியார்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும் புனிதநீர் ஊற்றினர். பின், பக்தர்கள் மீது, புனிதநீர் தெளிக்கப்பட்டது.