கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் சுதர்ஸன ஹோமம்: பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3416 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு, மகா சுதர்ஸன ஹோமம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் தொடங்கிய லட்சார்சனை, நேற்று மதியம் முடிந்தது. திருப்பதி திருமலையில் இருந்து வந்த பட்டாச்சாரியார்கள் நடத்தினர். ஈரோடு கோட்டை, தில்லைநகர், தெப்பகுளம், பிருந்தா வீதி, திருவேங்கிடம் வீதி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஹோமத்துக்கு பதிவு செய்த பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.