உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பெருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பெருவிழா

பெத்தநாயக்கன்பாளையம்: வாழப்பாடி அருகே, பேளூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி பெருவிழா நடந்தது. பேளூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீ மிதி பெருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !